‘கோட்’ படத்தின் 4வது சிங்கிள்.. விஜய் வேற லெவல்!

‘கோட்’ படத்தின் 4வது சிங்கிள்.. விஜய் வேற லெவல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் 4வது சிங்கிள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது வெளியானது. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

காலை முதலே பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் கோட் படத்தின் அப்டேட்டை கொடுத்திருந்தார்.

அர்ச்சனா கல்பாத்தியும் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், கோட் படத்தின் 4வது சிங்கிளான 'மட்ட’ பாடலை வெளியிட்டுள்ளனர்.

புதிய கீதை படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு யுவன் சங்கர் ராஜா கோட் படத்தில் இசையமைத்துள்ளார். விசில் போடு, சின்ன சின்ன கண்கள் மற்றும் ஸ்பார்க் உள்ளிட்ட பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அதில், நடிகர் விஜய் இந்த படத்தில் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல்களை பாடியிருந்தார். யுவன் சங்கர் ராஜா குரலில் ஸ்பார்க் பாடல் வெளியான நிலையில், விவேக் வரிகளில் தற்போது 'மட்ட’ பாடல் வெளியானது.

கோட் படத்தின் பாடல்கள் மீது இதுவரை விமர்சனங்கள் பெருமளவில் குவிந்த நிலையில், 4வது சிங்கிளான 'மட்ட’ பாடலாவது நெட்டிசன்கள் ட்ரோல்களில் இருந்து தப்பித்து தளபதி ரசிகர்களையாவது திருப்திப்படுத்துமா என்கிற கேள்விகள் எழுந்தன. சமீபத்தில், அளித்த பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி கண்டிப்பாக இந்த ராஜ மட்ட பாடலை கேட்ட பின்னர், அந்த ட்ரோல்களை எல்லாம் மறந்துடுவாங்க என்றார்.

கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், கோட் படத்தின் 4வது சிங்கிளான 'மட்ட’ பாடல் தற்போது வெளியானது. இளைய தளபதி நடனமாடும் பக்காவான பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. விஜய்க்கு ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட தாறுமாறான பாடல் வரிகளை எழுதிய விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

ஸ்பார்க் பாடலில் இளைய தளபதி விஜய்யை பார்த்த ரசிகர்கள் டீ ஏஜிங் சரியாக இல்லை என கடுமையாக ட்ரோல் செய்த நிலையில், தற்போது தாறுமாறு டீ ஏஜிங்குடன் இளைய தளபதி வெறித்தனமாக ஆடும் நடன காட்சிகள் அடங்கிய லிரிக் வீடியோவை வெளியிட்டு கோட் படத்திற்கான ஹைப்பை எக்கச்சக்கமாக எகிற விட்டுள்ளனர். செப்டம்பர் 5ம் தேதி தியேட்டர்கள் எல்லாம் தெறிக்கப் போகுது என தளபதி ரசிகர்கள் ராஜ மட்டையாகி விட்டனர்.

LATEST News

Trending News