தளபதியின் கோட் படத்தில் ஏ.கே. இருக்காரு.. ரசிகர்களே தயாராகிக்கோங்க.. வெங்கட் பிரபு சர்ப்ரைஸ்!
தளபதி விஜய் (Vijay) நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் (GOAT) படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் படத்தினை ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால், படத்தின் ரிலீஸ்க்கான பணிகளில் அர்ச்சனா கல்பாத்தி தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் புரோமோசனுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு பல செய்தி நிறுவனங்களுக்கும் யூடூயூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றார். இந்த பேட்டிகளில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றார். குறிப்பாக படத்தில் அஜித் இடம் பெறும் காட்சி இருப்பதாக தெரிவித்துள்ளார். அது குறித்து தெளிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கோட் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர், கோட் படம் தொடர்பாக, வெங்கட் பிரபுவிடம், மங்காத்தா படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கவேண்டும் என கூறியதாக வெங்கட் பிரபுவே ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல் படத்தின் ட்ரைலர் வெளியான தினத்தில் படத்தின் ட்ரைலர் பார்த்த அஜித், வெங்கட் பிரவுக்கு ட்ரைலர் நல்லா இருக்கு, விஜய்க்கும் டீம்க்கும் வாழ்த்து சொல்லீடு என தனக்கு மெசேஜ் செய்ததாக வெங்கட் பிரபு கூறினார்.
ஏற்கனவே கோட் படம் குறித்து அஜித் கூறியவற்றையெல்லாம், வெங்கட் பிரபு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல், அஜித்தை வைத்து அவரது 50வது படமான மங்காத்தா படத்தினை இயக்கினார். இந்தப் படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக மாறியது. மேலும், மங்காத்தா படத்திற்குப் பின்னர் அஜித் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் அஜித் இன்னும் ஒரு மாஸான ஹீரோவாகவும் மாஸான வில்லனாகவும் உயர்ந்து நிற்கும் படம் என்றால் அது மங்காத்தா படம்தான். மேலும் மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டிருந்தால் நான் வந்திருப்பேனே என விஜய் முன்பே கூறியதாக, வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
நடிகர் விஜய் கடந்த மாதம் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனால் அவரது 50வது வயதில் வெளியாகும் படம் தி கோட் என்பதால், இயக்குநர் வெங்கட் பிரபு தல 50யும் நான் தான், தளபதி 50யும் நான் தான் எனக் கூறினார். வெங்கட் பிரபுவின் இந்த பேச்சு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இந்நிலையில் தி கோட் படத்தில் அஜித் இடம் பெற்றுள்ளார் என்ற கேள்வி வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மங்காத்தா படத்தில் வேலாயுதம் படக் காட்சி இடம் பெற்றது. இதனால் தி கோட் படத்திலும் அஜித் இடம் பெறும் காட்சி உள்ளது. ஆனால் அது, என்னமாதிரியான சீக்வென்ஸ் என்று என்னால் கூற முடியாது. ஆனால் படத்தில் அஜித் இருக்கும் காட்சி உள்ளது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தில் விஜய் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அஜித் மற்றும் விஜய் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கோட் படத்தில் அஜித் இருக்கும் காட்சி ரசிகர்களுக்கு பெரும் திருப்தியைக் கொடுக்கும் என கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சு, விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்களையும் மகிழ்ச்சி படுத்தியுள்ளது.