நடிகை குஷ்புவின் ரூமுக்குள் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு நுழைந்த தயாரிப்பாளர்..

நடிகை குஷ்புவின் ரூமுக்குள் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு நுழைந்த தயாரிப்பாளர்..

கேரளாவில் நடைபெற்று வரும் பாலியல் தொல்லை புகார்கள் குறித்து ரங்கராஜ் பாண்டே நடத்திய நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். சினிமா துறையில் நடிகைகளுக்கு எதனால் பாலியல் தொல்லைகள் நடைபெறுகின்றன என்றும் பல ஆண்டுகள் கழித்து நடிகைகள் வெளியே வந்து சொல்வது ஏன் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

சினிமா துறையில் பாலியல் புகார்கள் வெளியாகி வரும் நிலையில், பலரும் சினிமா துறையையே கேவலமாக பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது என்றும் சினிமா துறையை விட மற்ற இடங்களில் பாலியல் தொல்லைகள் இதற்கு மேல் தலைவிரித்து ஆடுவதாகவும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

பல வருடங்கள் முன்னதாக தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய அறைக்கு வந்த போது நடந்த சம்பவத்தையும் அந்த பேட்டியில் நடிகை குஷ்பு ஷேர் செய்துள்ளார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனது தந்தையால் ஏகப்பட்ட சொல்ல முடியாத துயரங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளானேன். அதுகுறித்து வெளிப்படையாக சொல்லவே எனக்கு பல ஆண்டுகள் ஆகி விட்டன. யார் என்னை பாதுகாத்து இருக்க வேண்டுமோ அவரே என்னை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என குமுறியிருந்தார் குஷ்பு.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் வரும் போது, பெண்கள் தயங்காமல் நோ சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அந்த துன்பத்தில் அகப்பட்டு கஷ்டப்பட்டு பின்னர் அதுதொடர்பாக பேசினால் கூட சரியான நியாயம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என குஷ்பு கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு தயாரிப்பாளர் என்னுடைய ரூமுக்குள் வந்து அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேச ஆரம்பித்தான். உடனடியாக என்னோட செருப்பைக் கழட்டி என் செருப்பு சைஸ் 41 இதை மேக்கப் ரூமிலேயே கழட்டட்டுமா அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டில் கழட்டட்டுமா என்றதும் அவர் அங்கே இருந்து சென்று விட்டார். அதன் பின்னர், என் பக்கமே அவர் வரவில்லை. பெண்கள் தைரியமாக பேச முன் வந்தால் தான் இது போன்ற பிரச்சனைகள் சினிமா உலகில் எழாமல் தவிர்க்கப்படும் என நடிகை குஷ்பு பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

LATEST News

Trending News