மேடையில் திடீரென விலகிய மாளவிகா மோகனன் ஆடை.. வைரல் வீடியோ

மேடையில் திடீரென விலகிய மாளவிகா மோகனன் ஆடை.. வைரல் வீடியோ

நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. யுத்ரா எனும் அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

31 வயதாகும் மாளவிகா மோகன் நடிப்பில் இந்த மாதம் வெளியான தங்கலான் திரைப்படம் இரண்டு வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் மாளவிகா மோகனன்.

மலையாள திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனன் அவர்களின் மகளான மாளவிகா மோகனன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமானார். மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இஷான் கத்தார் ஹீரோவாக நடித்த பியாண்ட் தி கிளவுஸ் எனும் இந்தி படத்தை புகழ்பெற்ற ஈரானிய இயக்குனரான மஜித் மஜீதி இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது மீண்டும் பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திலும் மாளவிகா மோகனன் அறிமுகம் என்றே டிரெய்லரில் குறிப்பிட்டுள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தியாக நடித்து ரசிகர்களை அலறவிட்ட மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் இந்த மாதம் கோலிவுட்டில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை கொடுத்த நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ள யுத்ரா படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு தாறுமாறு கவர்ச்சி உடையை அணிந்து வந்த மாளவிகா மோகனன் யுத்ரா படத்தின் டிரெய்லரில் பிகினி உடைகளை எல்லாம் அணிந்துக் கொண்டு ஹீரோ சித்தாந்த் சதுர்வேதியுடன் செம ரொமான்ஸ் செய்துள்ளார். இதுவரை 12 மில்லியன் பார்வைகளை அந்த படத்தில் டிரெய்லர் பெற்றுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சேலை அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக வந்திருந்தார். ஆனால், பாலிவுட் படத்தின் புரமோஷன் என்பதால், அந்த நிகழ்ச்சிக்கே படு கிளாமரான உடையில் வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரது ஆடை விலகிய நிலையில், திடீரென கையை வைத்து மறைத்து ஆடையை சரி செய்த காட்சிகள் இணையத்தில் தற்போது #MalavikaMohanan என்கிற ஹாஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES