என்கிட்ட நிறைய செருப்பு இருக்கு.. உன்னோட நிச்சயம் ஏன் நின்னுப்போச்சு.. நடிகரை விளாசிய ஸ்ரீரெட்டி?
நீயெல்லாம் பெண்களின் சேஃப்ட்டி பற்றி பேசுறியா? உனக்கு எல்லாம் வெட்கமே இல்லையா? நீ எவ்வளவு தான் உத்தமனா நடிக்க முயற்சி பண்ணாலும் உன்னைப் பத்தி உலகத்துக்கே தெரியும் என நடிகை ஸ்ரீரெட்டி பெயர் குறிப்பிடாமல் அதிரடியாக பதிவிட்டு இருக்கும் போஸ்ட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை மீ டூ இயக்கம் ஆரம்பித்த போதே பல நடிகைகள் பாலியல் புகார்களை வெளிப்படையாக கூறினர். ஆனால், இந்தியாவில் மீ டூ இயக்கம் பெரிதாக எடுபடவில்லை.
ஆனால், கேரளாவில் நடிகைகள் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் தொல்லைகளை அனுபவித்து வருவதாக புகார் அளித்த வண்ணம் இருந்த நிலையில், நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமீபத்தில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பல முன்னணி சினிமா பிரபலங்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஸ்ரீரெட்டி ட்விட்டர் பதிவு: பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உமனைசரான நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். உலகத்துக்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய ஃபிராடு என்று ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது, நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா, அதெல்லாம் சரி உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை ஏன் விட்டுச் சென்றனர்.
உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன என நடிகரின் பெயரை குறிப்பிடாமல் ஸ்ரீரெட்டி ட்வீட் போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷால் தான் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஹேமா குழு போல தமிழ்நாட்டிலும் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடியுங்கள் என பேசியிருந்தார். ஸ்ரீரெட்டி விஷால் மீது ஏற்கனவே சுமத்திய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்கிற கேள்விக்கு ஸ்ரீரெட்டி யார் என்றே தெரியாது என்றும் ஆனால், அவரோட சேட்டைகள் பற்றி தெரியும் என பேசியிருந்தார். விஷாலுக்கான பதிலடி பதிவாகவே ஸ்ரீரெட்டி போட்டிருப்பதாக சோஷியல் மீடியாவில் விவாதம் வெடித்துள்ளது.