நடிகை கீர்த்தி சுரேஷுக்கு Propose செய்த பாடகர்.. யார் தெரியுமா.. ஓகே சொன்ன கீர்த்தி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
முதல் முறையாக இந்தி படத்தில் கமிட்டாகியுள்ள கீர்த்தி சுரேஷ், வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். அட்லீ இப்படத்தை தயாரிக்கிறார். தமிழில் வெளிவந்த தெரி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த பேபி ஜான்.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சரி கம பா' நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.
அப்போது கேரளத்தை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை propose செய்துள்ளார். இதற்கு நான் எப்படி நோ சொல்ல முடியும், I love you என கீர்த்தி சுரேஷும் அவரிடம் கூறிவிட்டார். அந்த மேடையில் இந்த விஷயம் கலகலப்பாக முடிந்தது.
இந்த நிலையில், அந்த சரி கம பா போட்டியாளர் நான் வேறொருவரிடம் சொல்ல நினைத்ததை கீர்த்தி சுரேஷிடம் சொல்லிவிட்டேன் என பின் கூறினார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கீர்த்தி பதில் கூறினார்.
இதோ அந்த வீடியோ..