நடிப்பை தாண்டி திடீரென புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை இனியா
தமிழில் வானை சூடவா திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா.
நடிப்பு மட்டுமில்லாமல் இப்போது புதிய தொழிலில் களமிறங்கியுள்ளார்.
அதாவது அவர் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த புதிய நடன பள்ளியில் இனியாவின் குரு அருண் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோவின் இணை நிறுவனராக உள்ளார். துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் விருது விழா நடைபெற்றுள்ளது.
அதில் சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தியவர், விருது விழங்கும் நிகழ்ச்சியை அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார் இனியா.
நடன பள்ளியை துவங்கியதோடு ஷோ இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.
நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது என்கின்றனர்.