என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பீங்களா, கொந்தளித்த மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.
இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் வெற்றிய்டைய சமீபத்தில் வந்த வாழை படமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மாரி தன் சொந்த ஊரில் வாழை படம் பார்க்க சென்றார், அப்போது ஒரு பத்திரிகையாளர் மாரியை சீண்டுவதற்காகவே இப்போதெல்லாம் இந்த மாதிரி பிரச்சனைகளே நடப்பதில்லை என்று கேட்டுவிட்டார்.
மாரி உடனே கோபப்பட்டு, இவன் இந்த மாதிரி படம் எடுப்பவன், இவனிடம் எதிர்மறையான கேள்வி கேட்கலாம் என்று கேட்காதீர்கள், கடந்த 6 மாதம் டேட்டா எடுத்து பாருங்கள், நீங்கள் பத்திரிகையாளர் தானே உங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்று கோபமாக பேசியுள்ளார்.