நகுல் சுனைனாவுக்கு அப்படி என்ன தொடர்பு?..சர்ச்சையை கிளப்பும் பிரபலம்
நகுல், திரைப்பட நடிகராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் திரைத்துறையில் வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வாஸ்கோடகாமா திரைப்படம் வெளியானது.
வாஸ்கோடகாமா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்துரு, நகுல் மீது நிறைய குற்றச்சாற்றுகள் முன் வைத்து வருகிறார். அதில், "தேர்வான நடிகையை நீக்கிவிட்டு நடிகை சுனைனாவை நடிக்க வையுங்கள் என்று நகுல் கூறியதாகவும், நகுலுக்கு சுனைனா மீது ஒரு ஆசை இருக்கிறது" என்று சந்துரு தெரிவித்துள்ளார்.
இவரின் பேச்சுக்கு, நகுல் பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று கூறிவருகின்றனர். ஆனால் சிலர், நகுல் சுனைனாவுக்கு அப்படி என்ன தொடர்பு இருக்கும்? ஒருவேளை இருக்குமோ? என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.