இத்தனை தோல்வி படங்களா, இப்படி ஒரு சோதனைகளா விஷாலுக்கு..
விஷால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் B, C செண்டர்களில் மிகப்பெரும் நாயகனாக வலம் வந்தவர். இவரின் சண்டக்கோழி, தாமிரபரணி, மருது ஆகிய படங்கள் செம்ம ஓட்டம் ஓடியது. ஆனால், விஷாலுக்கு இரும்புத்திரை படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.
இடையில் சக்ரா, வீரமே வாகை சூடும், லத்தி, ரத்னம், சண்டக்கோழி 2, அயோக்யா என பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.
அதோடு விஷாலை ஒரு சில காரணங்களால் சினிமாவிலும் நடிக்க தடை என சங்கங்கள் கூடி முடிவெடுக்க, என்னை யாராலும் தடுக்க முடியாது, நான் தொடர்ந்து நடிப்பேன் என்று விஷால் கூறியுள்ளார்.