சர்ச்சைக்குரிய தாண்டவ் வெப் சீரிஸ்… வருத்தம் தெரிவித்த அமேசான் ப்ரைம்!

இந்து மத உணர்வுகளை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக தாண்டவ் தொடர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இந்து மத உணர்வுகளை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக தாண்டவ் தொடர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
 

நடிகர்கள் சைஃப் அலிகான் மற்றும் டிம்பிள் கம்பாடியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் டாண்டவ். இது கடந்த வாரம் அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த தொடரை அலி அப்பாஸ் ஜாபர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த தொடரில் ஒரு இடத்தில் இந்து மதக் கடவுளை இழிவு செய்யும் விதமாகக் காட்சி படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மத்திய தகவல்துறை ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளிக்க சொல்லி அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இதையடுத்து தாண்டவ் படக்குழு எங்களுக்கு இந்து மத உணர்வுகளை இழிவுபடுத்தும் எந்த நோக்கமும் இல்லை என விளக்கமளித்து இருந்தனர். அதையடுத்தும் சர்ச்சைகள் ஓயாத நிலையில் இப்போது அமேசான் ப்ரைம் தளம் வருத்தம் தெரிவித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES