மீண்டும் வந்தது தப்போ?.. சீனியர் நடிகையை கேரவனுக்கு அழைத்து செல்லும் நடிகர்.. ஓவர் டார்ச்சராம்

மீண்டும் வந்தது தப்போ?.. சீனியர் நடிகையை கேரவனுக்கு அழைத்து செல்லும் நடிகர்.. ஓவர் டார்ச்சராம்

அந்த நடிகை தமிழ் சினிமாவில் சில காலம் மட்டுமே நடித்தாலும் ரொம்பவே ஃபேமஸ் ஆனவர். அழகு மட்டுமின்றி திறமையும் இருந்ததால் அவரை அள்ளி அணைத்துக்கொண்டது கோலிவுட் திரையுலகம். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க திடீரென திருமணம் செய்துகொண்டு சத்தமில்லாமல் செட்டில் ஆகிவிட்டார். இந்தச் சூழலில் மீண்டும் அவர் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த முறை அவரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு நடிகர் தொல்லை கொடுக்கிறாராம். மகாராஜா படத்தில் நடிக்கவிருந்த விஜய் ஆண்டனி.. விடாப்பிடியாக பிடித்துக் கொண்ட விஜய் சேதுபதி! கோலிவுட் வரலாற்றில் எத்தனையோ நடிகைகள் வந்திருக்கிறார்கள், வரவிருக்கிறார்கள். ஆனால் இதுவரை வந்தவர்களில் நடிக்கவும் தெரிந்து, அழகும் இருந்த நடிகைகள் என்றால் நூற்றுக்கு 70 சதவீதம் பேர்தான். அந்த வரிசையில் இருப்பவர்தான் இந்த நடிகை. மிக அழகு, சிறப்பான நடிப்பு என சினிமாவுக்கு தேவையான அத்தனையையும் அவர் வைத்திருந்தார். முதல் படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அந்தப் படத்தில் தனது நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தார்.


வாட்டசாட்டமான உருவம், நடிப்பு திறமை என அனைத்தும் இருந்ததால் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. நடிகையும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து நல்ல பெயரை பெற்றார். தேவைப்படும் இடத்தில் அளவான கிளாமரையும் காண்பிக்க அவர் தவறியதில்லை. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சீனியர் நடிகர் தன்னுடைய படத்தில் ஜோடியாக போட்டார். பல பிரச்னைகளை கடந்து படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

அந்தப் படத்தில் நடிகருக்கு இணையாக நடித்து அம்மணியும் ஸ்கோர் செய்தார். இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் பக்காவாக இருந்தது. ஆனால் அந்த கெமிஸ்ட்ரி தனி ரூம்வரை சென்றதாகவும்; சில காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகவும் அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சமயத்தில்தான் நடிகை திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். நடிகரின் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் நடிகை திருமணம் செய்துகொண்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இப்போது அம்மணி மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து அவர் நடிக்க வந்தாலும் அழகும், நடிப்பும் இன்னும் குறையவே இல்லை. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்களே அதற்கு சாட்சி. சூழல் இப்படி இருக்க பழைய குருடி கதவை திறடி என்பதற்கேற்ப சீனியர் நடிகர் நடித்துவரும் வாழ்க்கை படத்தில் அந்த நடிகையை முக்கியமான ரோலுக்கு கமிட் செய்துவிட்டார். நடிகையும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சரி பழைய கதையை எல்லாம் நடிகர் மறந்திருப்பார் என்ற நம்பிக்கையில்தான் நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றாராம். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நடிகையின் மீது என்ன மாதிரியான மோகம் இருந்ததோ அதே மோகம் இப்போதும் இருக்கிறதாம். ஷாட் இடைவெளியில் நடிகையை தனது கேரவனுக்கு அழைத்து சென்றுவிடுகிறாராம் நடிகர். ஒருகட்டத்தில் கேரவனுக்கு வரமாட்டேன் என்று நடிகரிடம் நடிகை சொல்ல; நடிகரோ நடிகையின் வீடுவரை சென்றுவிட்டாராம்.

இனியும் இப்படியே விட்டால் ஒத்துவராது என்பதால் நடிகர் அழைக்கும்போதெல்லாம் கேரவனுக்குள் சென்று வருகிறாராம். அதேசமயம் எப்படியாவது இந்த கூத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக; படத்தின் இயக்குநரிடம், அவர் இல்லாத நாளாக பார்த்து எனக்கு ஷூட்டிங் வையுங்களேன் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம். எதிர்த்தும் பேச முடியாமல், பட வாய்ப்பை இழக்கவும் முடியாமல் நடிகை தவியாய் தவித்துவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

LATEST News

Trending News