இயக்குநர் வெங்கட்பிரபுவை எச்சரித்த நடிகர் விஜய்
’GOAT’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவது தொடர்பாக நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட்பிரபுவை எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ’GOAT’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகர் விஜயின் போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக சமீபத்தில் படக்குழு அமெரிக்கா சென்று திரும்பியது. அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் இதில் நடித்துள்ளார்.
மகன் விஜயை இன்னும் இளமையாகக் காட்டவே விஎஃப்எக்ஸ் பணிகளுக்குப் படக்குழு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இதோடு மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மரியாதை செய்யும் விதமாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக அவரை இந்தப் படத்தில் கொண்டு வர இருக்கிறார்கள். இதுதொடர்பாகதான் நடிகர் விஜய், வெங்கட்பிரபுவிற்கு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
விஜயின் ஆரம்ப கால சினிமா கரியரில் நடிகர் விஜயகாந்த், விஜயின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறார். விஜயகாந்த் மீது சினிமாவைத் தாண்டி ரசிகர்களும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர். அதனால், ஏஐ தொழில்நுட்பத்தில் படத்தில் வரும் விஜயகாந்த் எந்த இடத்திலும் செயற்கையாகத் தெரிந்து விடக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறாராம் விஜய்.
அப்படி செயற்கையாக தெரிந்தால் அந்தக் காட்சிகளை நீக்க சொல்லிவிடுவேன் என்பதையும் எச்சரிக்கையாகச் சொல்லி இருக்கிறார் விஜய். இதனால், திரையில் விஜயகாந்தை தத்ரூபமாகக் கொண்டு வர தீயாய் வேலை செய்து வருகிறதாம் ’GOAT’ படக்குழு.