நான் அங்கு தப்பா சித்தரிக்கப்பட்டேன்...அது வாழ்வின் மோசமான முடிவு - நயன்தாரா வருத்தம்

நான் அங்கு தப்பா சித்தரிக்கப்பட்டேன்...அது வாழ்வின் மோசமான முடிவு - நயன்தாரா வருத்தம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தான் கஜினி. தற்போதிருக்கும் ரீ-ரிலீஸ் டிரெண்ட் காரணமாக இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த சூழலில் முன்பு ஒரு பேட்டியில் ‘கஜினி’ படம் பற்றி நடிகை நயன்தாரா பேசிய விஷயம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், கஜினி படத்தில் நான் நடித்தது என் வாழ்க்கையின் மிக மோசமான முடிவு என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கதை சொல்லும் போது, என்னுடைய கதாபாத்திரம் எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் படத்தில் அமையவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். ஆனால், இது பற்றி நான் பெரிதாக புகார் செய்ய விரும்பவில்லை.

ஏனெனில், இந்த அனுபவமும் என் வாழ்வில் ஒரு கற்றல் அனுபவமாக நான் கருதுகிறேன் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். நடிகை நயன்தாராவின் அதிருப்தி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அப்போதே பதிலளித்துள்ளார்.

அதாவது, எனக்கு ஒரு கதாபாத்திரம் அல்லது நபரை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக, என்னால் படத்தில் ஒரு பாத்திரத்தை குறைக்கவோ அல்லது விரிவாக்கவோ முடியாது. சில சமயங்களில் நமக்குப் பிடிக்காத நடிகர்களுக்கு நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்திருப்போம். பிடித்தவர்களுக்கு சிறிய கதாபாத்திரம் கிடைத்திருக்கலாம். அது நம் கையில் இல்லை என கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES