பெரிய ஸ்டார் தான்.. ஆனா விஜய்க்காக எல்லாம் சினிமா நிக்காது - பிரபல நடிகை பளீச்

பெரிய ஸ்டார் தான்.. ஆனா விஜய்க்காக எல்லாம் சினிமா நிக்காது - பிரபல நடிகை பளீச்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், 2024 மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை.

அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று அறிவித்தார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட 2 படங்களுடன் சினிமாவில் இருந்து விளக்கவுள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இதனிடையே விஜய் சினிமாவை விட்டு வெளியேறினால் எந்த பாதிப்பும் இருக்காது என்று நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாகவே விஜய் பெரிய ஸ்டாராக இருப்பதாகவும், ஆனால் சினிமா கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன்னுடைய பயணத்தை துவங்கி விட்டதாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

அதனால் சினிமா ஒரு ஆளுக்காக எல்லாம் நிற்காது. அது அமிதாப்பச்சனாகவே இருந்தாலும் லியார்னோ டி காப்ரியாவாகவே இருந்தாலும் சினிமா யாருக்காகவும் நிற்காது. தனது பயணத்தை தொடரும் என்றும் கஸ்தூரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES