சூர்யாவை விட அவங்க கூட தான் நெருக்கம் அதிகம்.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்
ஜோதிகா கடந்த 2006 -ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா இப்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகா, "எனக்கு சூர்யாவை விட சூர்யாவின் குடும்பத்தார் ரொம்ப நெருக்கம்.நான் குழந்தை பெற்றபோது எனது அம்மாவும் சூர்யாவின் அம்மாவும் எனக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை எங்களிடம் சொன்னார்கள்".
"என்னுடைய மாமனார் தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலும் பள்ளியிலிருந்து அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து அன்றாட கடமையாக செய்து வருகின்றார்" என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.