பிரபல தமிழ் நடிகர் சடலமாக மீட்பு

பிரபல தமிழ் நடிகர் சடலமாக மீட்பு

தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா - வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான 'சொன்ன புரியாது'  திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன். 

அதிக உடல் பருமனோடு இருப்பதால் பல படங்களில், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்திலேயே நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இவர் நடித்த தெகிடி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. 

பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டு பயலே 2, சங்கு சக்கரம், இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப், ஹீரோ, மனம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் பிரதீப் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பொலிஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES