அந்த ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகல; இப்போ டேட்டிங் பண்றேன்

அந்த ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகல; இப்போ டேட்டிங் பண்றேன்

மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். 2021 -ல் விஷால் ஆர்யா நடித்த ‘எனிமி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பெரிதாக தமிழ் படங்களில் கமிட் ஆகவில்லை.

தற்போது, மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்துள்ளார். அந்த பட ரிலிஸ்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நான் ஒருவரை பார்த்தேன்.

நாங்கள் ‘Long Distance’ ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால், சில காரணங்களால் அது வொர்க் அவுட் ஆகவில்லை. என்னைப்பொருத்தவரை, ரிலேஷன்ஷிப் என்பது முக்கியமானது. ஆனால், அது இலகுவாக இருக்க வேண்டும். நான் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு,

ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் கூடுதலான அழுத்தத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நீங்கள் ஒரு முறை, இருமுறை ஏன் மூன்று முறை கூட வாய்ப்பை வழங்கலாம். ஆனால், அதற்கு மேல் சென்றால், உங்களுக்கு மனஅழுத்தம் வந்துவிடும். அதன்பின்னர் அது உங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், இப்போது நான் ஒருவரை பார்த்திக்கிறேன். இந்த உறவில் நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை. பார்ப்போம் வாழ்க்கை எப்படி எடுத்து செல்கிறது என்று.. அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம். ஆனால், சில விஷயங்கள் காலப்போக்கில் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES