உங்க கண்டீசன்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க!! நயன்தாராவுக்கு அல்வா கொடுத்து சமந்தாவை புக் செய்த இயக்குனர்

உங்க கண்டீசன்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க!! நயன்தாராவுக்கு அல்வா கொடுத்து சமந்தாவை புக் செய்த இயக்குனர்

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தன் வளர்ச்சியை நிலைநிறுத்தி தனக்கான ஒரு கோட்டையை கட்டி வருகிறார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் தன் மார்க்கெட்டை அதிகரித்து 12 கோடி சம்பளமாக உயர்த்தி அதிரவைத்தார். தற்போது தன்னுடைய 2 ஆம் திருமண நாளை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை ஆண் குழந்தையுடன் கொண்டாடினார்.

இந்நிலையில் நடிகர் கவின் நடிக்கும் ஒரு படத்தில் நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் மலையாளத்தில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் என செய்திகள் பரவியது. ஆனால் நடிகை நயன் தாரா திடீரென மலையாள படத்தில் இருந்து விலகியிருக்கிறாராம். கோடம்பாக்கத்தில் உள்ள சில பேர் ஒரு வேளை நயன்தாரா போட்ட அப்படியொரு கண்டீசனுக்கு ஒத்துழைப்பு தராததால் தான் நயன் தாரா எஸ்கேப் ஆகியிருக்கிறாரோ என்று கூறி வருகிறார்கள்.

நயன்தாராவை பொறுத்தவரையில் ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் ஏகப்பட்ட கண்டீசன்கள் போடுவார். அப்படி 20 கிலோமீட்டர் தூரத்தில் தான் படப்பிடிப்பு இருக்க வேண்டும் வெளிநாட்டு ஷூட்டிங்கிற்கு வரமாட்டேன் என்றும் பல கண்டீசன்கள் போடுவார். அதற்காக உள்ளூரிலேயே செட்டை போட்டு தயாரிப்பாளர்கள் எடுத்து வருகிறார்கள்.

இந்த கண்டீசன்களுக்கு எல்லாம் ஒற்றுக்கொள்ளவில்லை என்பதால் தான் நயன் தாரா கெளதம் மேனன் படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது நயன் தாராவுக்கு பதில் நடிகை சமந்தாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES