பிரபல நடிகை மீது வெறித்தனமான காதல்!! புரபோஸ் பண்ண வீட்டுக்கு சென்ற ரஜினி..

பிரபல நடிகை மீது வெறித்தனமான காதல்!! புரபோஸ் பண்ண வீட்டுக்கு சென்ற ரஜினி..

சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து பல கோடி ரசிகர்களின் மனதை ஈர்த்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்த் இப்படத்தினை தொடர்ந்து கூலி படத்திலும் நடிக்கவுள்ளார். 71 வயதான ரஜினிகந்த் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ள ரஜினிகாந்த், பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அப்படி நடிகை ஸ்ரீதேவியுடன் 19 படங்களில் இனைந்து நடித்துள்ளார் ரஜினி. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தநிலையில், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரீதேவியை வெறித்தனமாக காதலித்திருக்கிறார். ஸ்ரீதேவியின் தாயுடன் நல்ல பழக்கம் இருந்ததால் தன்னைவிட 13 வயது இளையவளான ஸ்ரீதேவியை நன்றாக பாதுகாத்து வந்தார். ஒருக்கட்டத்தில் காதலிக்க தொடங்கிய ரஜினி, ஸ்ரீதேவிக்கு 16 வயது இருக்கும் போது அவரின் தாயிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிருகிறாராம்.

ரஜினி ஸ்ரீதேவியை வெறித்தனமாக காதலித்த போது ஸ்ரீதேவி ரஜினியை காதலித்தாரா என்று உறுதியாக தெரியவில்லை. ஒருமுறை கே பாலசந்தர் பேட்டியொன்றில், ரஜினி ஸ்ரீதேவியை மிகவும் காதலிதார் என்றும் அவர் வீட்டிற்கு சென்று அவரிடம் திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்றும் காதல் பிரபோஸ் செய்ய சென்றதாகவும் கூறினார். ஸ்ரீதேவி வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு நானும் ரஜினியும் சென்ற போது அவர் வீட்டில் மின்சாரம் போய்விட்டது.

வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் கெட்ட சகுனமாக கருதிய ரஜினி திருமணம் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் என்று பாலசந்தர் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் தனிப்பட்ட மொபைல் நம்பர், ஸ்ரீதேவி, கமல் ஹாசன், பாலசந்தர் போன்றவர்களிடம் மட்டும் தான் இருந்துள்ளது.

ஒருமுறை ரஜினி நோய்வாய்ப்பட்ட போது, ஸ்ரீதேவி விரதம் இருந்து ஷீரடி சாய்பாபவிடம் பிராத்தனை செதும் புனேவில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு 7 நாட்கள் விரதம் இருந்து சென்றிருக்கிறார். ஸ்ரீதேவி இறந்தபோது அதிர்ச்சியான ரஜினிகாந்த் தனது 37வது திருமண நாளான பிப்ரவரி 26 அன்று கொண்டாடாமல் இருந்திருக்கிறார்

LATEST News

Trending News

HOT GALLERIES