3-ஆம் முறை கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி!! வைரலாகும் வீடியோ..

3-ஆம் முறை கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி!! வைரலாகும் வீடியோ..

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். சமீபகாலமாக சிவாகர்த்திகெயன் குறித்த பல செய்திகள் வதந்திகளாக இணையத்தில் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து அதற்கு எதுவும் பதிலளிக்காமல் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருந்த நிலையில் அவரது மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தியுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓட்டுப்போட வந்திருந்தார். அப்போது ஆர்த்தி பார்க்க கர்ப்பமாக இருப்பதை போன்று இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

தற்போது ஆர்த்தி சமீபத்தில் தன் கணவருடன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆர்த்தி கலந்து கொண்டுள்ளார். அவரை பார்க்க கர்ப்பமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார். இது உண்மையா பொய்யா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES