எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்ததா!! தயாரிப்பாளர் முன்பே உண்மையை கூறிய இளம் நடிகை..

எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்ததா!! தயாரிப்பாளர் முன்பே உண்மையை கூறிய இளம் நடிகை..

சினிமாத்துறையில் நடிகைகள் வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு என்ற நிபந்தனை இருப்பதாக சமீபகாலமாக கூறி வருவது அதிர்கரித்து வருகிறது. அதிலும், வேறு மொழி பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் போது அவர்களுக்கு இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது என்று வெளி மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் கூறி வருகிறார்கள்.

அந்தவகையில், புதுமுக தயாரிப்பாளரான முஹவை ஜமீன் என்பவர் தயாரிப்பில் ஆங்காரம் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமாகும் நடிகை டீனா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் நடிகை டீனாவிடம் பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை கேட்டுள்ளனர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகளுக்கு மரியாதை இல்லை என்று கூறுவார்கள் உங்களுக்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, மரியாதை நல்லாதான் இருந்தது. தவறாக எதுவும் வரவில்லை.

இந்த படத்தில் யாரும் பிரச்சனை தரவில்லை. இந்த படத்தில் யாராலும் எனக்கு பாலியல் பிரச்சனை இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டிருந்தால் நான் இங்கே இருக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை டீனா.

LATEST News

Trending News

HOT GALLERIES