கையில் சுருட்டுடன் நடிகை சோனியா அகர்வால்... மிரள வைக்கும் காட்சி

கையில் சுருட்டுடன் நடிகை சோனியா அகர்வால்... மிரள வைக்கும் காட்சி

நடிகை சோனியா அகர்வால் கையில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்த இவர் இயக்குனரும், தனுஷின் அண்ணனான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தார்.

பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததுடன், சோனியா அகர்வால் சினிமாவை விட்டே வெளியேறினார்.

தற்போது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்துள்ள சோனியா அகர்வால், தண்டுபாளையம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.

மேலும் இதில் நடிகை வனிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விரைவில் வெளியாக இருக்கிறது.

"மரண மாஸ் ரசிகர்களுக்கு மட்டுமே" என்ற டேக் லைனுடன் "தண்டுபாளையம்" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.   

LATEST News

Trending News

HOT GALLERIES