நடிகையுடன் ஜிவி பிரகாஷ் நெருக்கமாக நடிக்கும் போது எனக்கு இப்படி தான் இருக்கும்.. சைந்தவி ஓபன் டாக்..

நடிகையுடன் ஜிவி பிரகாஷ் நெருக்கமாக நடிக்கும் போது எனக்கு இப்படி தான் இருக்கும்.. சைந்தவி ஓபன் டாக்..

சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சைந்தவி கொடுத்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஜிவி பிரகாஷ் படத்தில் இவ்ளோ நெருக்கமாக நடிக்கிறார் அதை பார்க்கும் போது உங்களுடைய மனநிலை என்ன? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டு இருப்பார்.

இதற்கு பதில் அளித்த சைந்தவி, "ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிக்க போறேன் என்று சொன்னதுமே நிரைய கண்டிஷன் போட்டேன் ஆனால் அவர் அதை எதையும் பின்பற்றவில்லை. டார்லிங் படத்தில் நெருக்கமாக நடித்திருந்தார் எனக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் படத்தை பார்த்து நிறைய பேர் சந்தோசம் அடைந்தார்கள்".

”சினிமாவில் நடிக்கும் நடிகர்க்கு எல்லாருக்கும் கல்யாணம் ஆகியுள்ளது, மனைவியும் இருப்பார்கள்.. அவங்களும் வீட்டுலையும் பார்ப்பார்கள், அவர்களுக்கும் இப்படி தான் இருக்கும் போல என்று நினைத்தேன். இப்போ எல்லாமே பழகிவிட்டது” என்று சைந்தவி கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES