அந்த சமயத்தில் எனக்கு அவர்களால் இதுதான் நடந்தது!! ஷாக் கொடுத்த நடிகை மனிஷா..
90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் இடத்தினை பிடித்து ரசிகர்களை தன் கவனத்திற்கு கொண்டு வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. ஷாருக்கானின் உயிரே, அரவிந்த் சாமியின் பம்பாய், கமல் ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் 2010ல் சம்ரத் தஹால் என்பவரை திருமணம் செய்த இரு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதனைதொடர்ந்து 2012ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின் குணமடைந்த மனிஷா கொய்ராலா, புற்றுநோய்க்கென்று விழிப்புணர்வு விஷங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில், அனைவரும் அவரவரின் ஆரோக்கத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்றும் எனகு நிறைய உறவினர்களுடன் பெரிய குடும்பம் இருந்தது. அனைவரும் வசதியானவர்கள் தான். ஆனால், புற்றுநோய் பாதித்த போது எல்லோரும் விலகி போனார்கள். நண்பர்களும் விலகினர். யாருமே என்னை பார்க்க வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எல்லோரும் பிரிந்து சென்றாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் தான் என்னுடன் இருந்தார்கள். அந்த சமயத்தில் எனக்கு பல விஷயங்கள் நடந்தன. நோய் பாதிப்புக்கு முன் இருந்த மாதிரி தற்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை எனவும் இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை செய்கிறேன் என்றும் உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகை மனிஷா கொய்ராலா.