மனைவியிடம் ரொமான்ஸ் கற்றுக்கொண்ட பிரபலம்.. படப்பிடிப்பில் நடந்த கிக்கான சம்பவம்
துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் ஆரம்ப காலத்தில் துல்கர் சல்மானுக்கு ஆக்சன் காட்சிகள் மற்றும் எமோஷனல் காட்சிகள் மட்டுமே நடிப்பதற்கு ஈசியாக இருந்துள்ளது. ரொமன்ஸ் காட்சி என்றாலே 10 ஸ்டெப் தள்ளி நின்று விடுவார். அந்த அளவிற்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கத் தெரியாமல் இருந்துள்ளார் துல்கர் சல்மான்.
ஆனால் இப்ப துல்கர் சல்மானுக்கு யாரும் ரொமன்ஸ் சொல்லித் தரத் தேவையில்லை விட்டா அவரே 10 பேருக்கு ரொமன்ஸ் சொல்லித்தருவார். அந்த அளவிற்கு தற்போது ரொமன்ஸில் பின்னி பெடல் எடுத்து வருகிறார் துல்கர் சல்மான்.
இவரது ரொமன்ஸ் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் இயல்பான ரொமன்ஸ் காட்சி மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் துல்கர் சல்மான்.
தற்போது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தும் துல்கர் சல்மானுக்கு ஒரு காலத்தில் அவர் மனைவிதான் படங்களில் ரொமன்ஸ் காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்துள்ளார்.
dulquer salmaan wife
அதுமட்டுமில்லாமல் இவரது ஆரம்ப காலத்தில் வெளியான படங்களை பார்க்கும்போது ரொமன்ஸ் காட்சிகளில் சொதப்பி இருப்பது நன்றாகவே தெரியும். ஆனால் தற்போது படங்கள் மட்டுமில்லாமல் அவார்டு ஃபங்ஷன் உட்பட அனைவர் முன்னிலையிலும் ரொமன்ஸ் காட்சிகளைப் பற்றி பேசுவது மற்றும் ரொமன்ஸ் காட்சியில் நடிப்பது பற்றி தைரியமாக பேசுகிறார்.
ஓ காதல் கண்மணி படம் வெளிவந்த பிறகு ஒரு அவார்டு பங்ஷனில் ஹன்சிகாவை பார்த்து ரொமன்டிக்காக மொபைல் நம்பர் கேட்பது போல் நடித்திருப்பார். அந்த அளவிற்கு தற்போது ரொமன்ஸ் காட்சியில் நடிப்பதற்கு முன்னேறி உள்ளார் துல்கர் சல்மான்.