அம்மா கதாபாத்திரத்துக்கு கூட அட்ஜெஸ்ட் பண்ண சொல்றாங்க.. புலம்பும் சீனியர் நடிகை..

அம்மா கதாபாத்திரத்துக்கு கூட அட்ஜெஸ்ட் பண்ண சொல்றாங்க.. புலம்பும் சீனியர் நடிகை..

ஒரு காலத்தில் சினிமா நடிகையாக பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை தற்போது மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகளே இல்லாத நிலையில், அம்மா நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் பக்கத்து ஸ்டேட் படத்தில் நடிக்க முயற்சித்து இருக்கிறாராம். அந்த படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளார்.


ஆனால், ஷூட்டிங் தொடங்கிய ஒரு வார காலத்துக்குள் அவரது சந்தோஷம் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போய் விட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தளவுக்கு அந்த படத்தின் இயக்குநர் அந்த நடிகையை டார்ச்சர் செய்து விட்டதாக கூறுகின்றனர்.
சினிமாவில் நடிகர்கள் சங்கம் எல்லாம் இருந்தாலும் நடிகர்களுக்கும் குறிப்பாக நடிகைகளுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை என தனது கஷ்டத்தை சக நடிகையிடம் புலம்பித் தீர்த்து இருக்கிறார் அந்த நடிகை.

ஹீரோயினாக நடிக்கும் போது அந்த நடிகை செம பிஸியாக நடித்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த இயக்குநருடன் விவாகரத்து நடைபெற்ற நிலையில், அதற்கு பின்னர் அவரது மார்க்கெட் ஒரேயடியாக கவிழ்ந்து விட்டது. தொடர்ந்து தற்போது கிடைக்கும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மா கதாபாத்திரத்துக்கு அழைத்தாலும் மறுப்பு சொல்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகை.

இந்த வயதிலும் அந்த நடிகையின் இளமை குறையாமல் அப்படியே அவர் மெயின்டெயின் செய்து வரும் நிலையில், நடிகையை பார்க்கும் பலருக்கும் இவர் அனைத்துக்கும் அட்ஜெஸ்ட் செய்து போய் விடுவார் என்றே எண்ணி வருகின்றனர். மேலும், நடிகை இன்னமும் சிங்கிளாக இருப்பதால் நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய பேச்சுக்களை பல நடிகர்களும், இயக்குநர்களும் ஈஸியாக கேட்டு நடிகையை கஷ்டப்படுத்தி வருகிறார்களாம்.


ஆரம்பத்தில் தான் அதுபோன்ற தொல்லைகள் இருந்தது. இப்போது அம்மாவாகத்தானே நடிக்கப் போகிறோம் என பெரிய படத்தில் நல்ல சம்பளத்துக்கு நடிக்க சான்ஸ் கிடைத்ததும் ரொம்பவே ஹேப்பியாகி விட்டாராம். ஆனால், ஒரு வார கால சூட்டிங் சென்ற பின்னர் அந்த நடிகையிடம் மெல்ல அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய பேச்சுக்களை உதவி இயக்குநர்கள் மூலம் கிளப்ப கடுப்பான நடிகை முடியவே முடியாது என சொல்லியிருக்கிறார்.

சில நாட்கள் நடித்து சம்பளத்தை எல்லாம் வாங்கிக் கொண்டால் நடிகை எல்லாவற்றுக்கும் சம்மதித்து விடுவார் என அந்த இயக்குநர் தப்புக் கணக்கு போட்ட நிலையில், இந்த விவகாரம் பெரிதான நிலையில், நடிகை அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டு அந்த படத்தில் இருந்து ஒரேயடியாக விலகி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

LATEST News

Trending News