ஸ்ருதி ஹாசனால் லோகேஷ் வீட்டில் நடந்த பிரச்சனை!! காதல் என்ற பெயரில் அதை பன்றாங்க..
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இவர் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார். ஆனால் சில காரணங்களால் இருவருக்கும் இடையே பிரேக் ஆப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர், சபிதா ஜோசப் ஸ்ருதி ஹாசன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஸ்ருதி ஹாசன் காதல் என்ற பெயரில் சூதாட்டம் பண்ணிட்டு இருக்காங்க.
ஒவ்வொரு முறையும் காதலிக்கிறேன் சொல்லிட்டு தான் இருக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண் கூட படம் பண்ணும் போது நெருக்கமாக பழகுனாங்க, ஆனால் படம் முடிந்தவுடன் பிரேக் அப். அப்பறம் அடுத்த காதல்.
இதுவரை இரண்டு வெடி கொண்டு வச்சிட்டாங்க, ஒன்று 3 என்ற படத்தின் மூலம் தனுஷ் வீட்டில் வெடித்தது. இப்போ அது விவகாரத்தில் வந்து நிக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் வீட்டில் குண்டு வெடித்து கொண்டு இருக்கிறது. அவர் வீட்டில் ஒரே பிரச்சனையா இருக்கு. அதை பற்றி இனிமே தெரியவரும் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கு நமது விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.