திருமணம் பண்ணா யாரு நல்ல இருப்பா!! சமந்தா லுக்கில் மாறி திடீர் வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்...
நடிகர் சரத்குமாரின் மகளாக போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி வில்லி ரோலிலும் நடித்து வருகிறார். 39 வயதாகும் நடிகை வரலட்சுமி சமீபத்தில் நிக்கோலாய் என்பவருடன் நிச்சயதார்த்தத்தை முடிந்திருந்தார்.
அவர்களது நிச்சயம் பெரியளவில் வைரலாகி கிண்டல் செய்யும் அளவிற்கு சென்றது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பேசுபவர்களை பற்றி கவலைப்படாமல் தன் வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட நிக்கோலாய் தன் வருங்கால மனைவி வரலட்சுமிக்கு மும்பையில் பிரமாண்ட வீட்டினை இருவரின் பெயரிலும் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில் வரலட்சுமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது, நிச்சயம் முடிந்த நிலையில், திருமணமானால் யாருக்கு நல்லது என்று ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஃபன் செய்திருக்கிறார்.
அந்த ரீல்ஸ் வீடியோவில், திருமணம் நடந்தால் யாருக்கு நல்லது? திருமணம் நடந்தால் புகைப்படக்கலைஞர்கள், வீடியோகிராஃபர்ஸ், சமையல்காரர், மண்டக்காரர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சேலை கட்டி விற்பவர் போன்றவர்களுக்கு நல்லது என்றும் அதனால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் தெலுங்கில் பேசியபடி வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.