அந்த விசயத்தில் நடிகை நமீதாவை ஏமாற்றிய அஜித்!! 16 வருஷமாக கண்டுக்கொள்ளாமல் ஒதுக்கி வரும் AK..

அந்த விசயத்தில் நடிகை நமீதாவை ஏமாற்றிய அஜித்!! 16 வருஷமாக கண்டுக்கொள்ளாமல் ஒதுக்கி வரும் AK..

நடிகர் அஜித்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக இருப்பது பில்லா படம் தான். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன் தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. சமீபத்தில் அஜித் குமாரின் பிறந்தநாளுக்கு பில்லா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை குஷி படத்தியது.

சமீபத்தில் பில்லா படத்தில் நடித்த நடிகை நமீதா படத்தில் நடந்த சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அஜித்தும் நானும் ஒரே மாதிரியான டைஃப் என்றும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக யாரிடமும் பேச மாட்டோம் என்று கூறியிருக்கிறார். 

மேலும், ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கின் போது அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுப்பது அஜித்தின் பழக்கம் இருப்பது தெரியுமா என்ற கேள்விக்கு அப்படியா என்று ஆச்சரியப்பட்டுள்ளார். பில்லா படத்தில் நமீதா நடிக்கும் வரை அந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவே இல்லையாம்.

ஒருவேளை நான் செட்டில் இல்லாத போது அஜித் செய்து கொடுத்திருக்கலாம் எனவும் அது சம்பந்தமான பல புகைப்படங்களை நான் சோசியல் மீடியாவில் பார்ப்பதாகவும் பில்லா படத்திற்கு முன்பும் படத்திற்கு பின்பும் அஜித்தை நான் பார்க்கவே இல்லை என்று நமீதா தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES