5 ஆயிரத்துக்காக இப்படியா நடந்துப்பாங்க.. அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷன் ஆகிடும்!! ஓப்பனாக பேசிய நடிகை காயத்ரி..

5 ஆயிரத்துக்காக இப்படியா நடந்துப்பாங்க.. அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷன் ஆகிடும்!! ஓப்பனாக பேசிய நடிகை காயத்ரி..

தமிழில் டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி ரெமா. பல படங்களில் நடித்து வந்த காயத்ரி, நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான டோரா படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க காரணமே அட்ஜெஸ்ட்மெண்ட் விசயத்திற்கு நோ சொல்லி வருவது தான் என்று ஓப்பனாக பேசியிருந்தார். நடிகை பிந்து மாதவியை வைத்து ஒரு படம் இயக்கிய பிரபல இயக்குனர், அவர் படத்தில் என்னை ஹீரோயினாக நடிக்க வைப்பதாக கூறினார். அந்தமாதிரியான நெருக்கமான காட்சிகள் எல்லாம் இருக்கும் என்று கூறி நடிக்க முடியுமா என்று கேட்டார். நான் உடனே நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.

வெப் சீரிஸ்லலாம் குளோசாக நடிக்கிறீங்க என்று கேட்டதும், படத்த்தில் கொலை பண்ணுறதுக்காக நிஜமாக கொலை பண்ணுவாங்கலா என்று சொன்னேன். அதை கேட்டது ஓ சூப்பர் இப்படி தான் போல்டா பேசனும் என்று கூறி ஓடி வந்து என் பின் பகுதியை பிடித்துவிட்டார். உடனே கடுப்பாகிய நான் உங்க சூட்டிங்கில் ஓங்கி அறைஞ்சா உங்களுக்கு அசிங்கமாகிவிடும், எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொல்லிவிட்டேன்.

சாரிம்மா கும்முன்னு இருக்குற உன்னை பார்த்ததும் மூடாகிவிட்டேன் என்று அப்படியே பச்சையாக பேசினார். அந்த இயக்குனர் பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் நாம் ஒரு விசயத்துக்கு நோ சொல்லிட்டால், நம்மை அதன்பின் யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க, ஓகே சொல்லி ஹீரோயினாக மாறுபவர்கள் சிலர் ரூமுக்கு செல்வதையும் பார்த்து இருக்கிறேன், அவர்கள் இஷ்டத்தை தப்பா பேச நமக்கு தகுதியில்லை என்றும் நடிகை காயத்ரி ரேமா ஓப்பனாக பேசியிருக்கிறார்.

மேலும், நாங்க பொண்ணுங்க, மாதம் 4 நாட்கள் பிரச்சனை வரத்தான் செய்யும். அந்த சமயத்தில் டைரக்‌ஷன் டிப்பார்ட்மெண்ட்டில் பெண்கள் இருந்தால் ஓகே, ஆனால் இல்லை என்றால் மேனேஜரிடம் சென்று தனியாக அறை ஒதுக்கி கொடுத்தால் நல்லா இருக்கும் என்று கேட்போம்.

அதுக்கே ஹீரோயின் கேரவனை யூஸ் பண்ணிக்கோங்க என்று சொல்லி அங்கே கால் எடுத்து வைத்தால், நடிகையின் அம்மா ஓடி வந்து, அது எப்படி வழில போறவற ஆர்ட்டிஸ்ட்டுக்கு எல்லாம் கேரவன் யூஸ் பண்ண சொல்றீங்க என்று ரெண்டு மூணு தடவை என்னை அசிங்கப்படுத்தி இருக்காங்க. வெப் சீரிஸில் நடிக்கும் போது மேக்கப் ரூமில் கேரவன் இருந்தும் மோசமான பாத்ரூமை பயன்படுத்த சொன்னாங்க, இன்ஃபெக்‌ஷன் வந்துடும் இப்போது அப்படி சொல்றீங்க என்று கேட்பேன்.

அப்படி எங்களை மட்டம் தட்டியெல்லாம் நடத்துவாங்க. விஜய் ஏ ஆர் முருகதாஸின் சர்கார் படத்தில் கூட கேரவன் யூஸ் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க. ஒரு 5 ஆயிரம் ரூபாய்க்கு இப்படி ஏன் நடத்துரீங்க, என்று காயத்ரி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News