வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த நடிகர்.. திருமணத்திற்கு முன்பே ஜகா வாங்கிய நடிகை
நடிகை தமிழில் சில படங்கள் நடித்தாலுமே நல்லா பரிச்சயமாகி உள்ளார். ஏனென்றால் அவர் நடித்த படங்கள் எல்லாமே டாப் ஹீரோக்கள் உடைய படம் தான். அந்தப் படங்கள் ப்ளாப்பானாலும் நடிகைக்கு ஓரளவு மவுசு இருந்து தான் வருகிறது.
இப்போது அதிகம் அக்கடதேச மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை நடிகை காதலித்து வந்தார். அவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் நடிகரைப் பற்றி பல விஷயங்கள் திருமணத்திற்கு முன்பே நடிகைக்கு தெரிய வந்துள்ளது. அதாவது நிறைய பெண்களுடன் நடிகருக்கு தொடர்பு இருந்து வருகிறதாம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல நடிகர் மாட்டிக்கொண்டார்.
இதனால் கடுப்பான நடிகை என் மூஞ்சிலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டாராம். மேலும் திருமணத்திற்கு முன்பே நடிகரைப் பற்றிய எல்லா விஷயமும் தெரிந்ததால் நடிகை இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
மேலும் நடிகரின் சுயரூபத்தால் நிலை குலைந்து போன நடிகை மன அழுத்தத்தில் இருந்தார். இப்போது அதில் இருந்து வெளியே வருவதற்காக தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி தன்னை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளார்.