பாலா கொடுத்த டார்ச்சரில் சிக்கிய 5 நடிகைகள்!! சினிமாவைவிட்டே ஓடிய அஜித் பட நடிகை..
இயக்குனர் பாலாவின் திரைக்கதைக்கென்ற பல ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. தத்ரூபமான காட்சிகள் மூலம் மிரள வைக்கும் இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களை அடித்து டார்ச்சர் செய்து நடிப்பை வரவழைக்கும் பழக்கம் இருக்கிறது. சமீபத்தில் கூட நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் பாலா கொடுத்த டார்ச்சரால் படத்தில் இருந்தே வெளியேறிவிட்டார். அப்படி பாலாவின் டார்ச்சரில் சிக்கிய 5 நடிகைகளின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா பாலா இயக்கத்த்ல் நாச்சியார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தில் சிறு வயதிலேயே கற்பழிப்பு காட்சி, கர்ப்பிணி ரோலில் நடிப்பது என்று பல டார்ச்சர்களை அனுபவித்திருக்கிறாராம். இவானாவின் அப்படியொரு நடிப்பை நடிகை ஜோதிகாவே மேடையில் பாராட்டி இருக்கிறார்.
நான் கடவுள் படத்தில் பாலாவிடம் மிகமோசமாக சிக்கிக்கொண்டவர் தான் நடிகை பூஜா. கண் தெரியாத பெண்ணாக நடிக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் பூஜா. அதாவது, கண்ணில் லென்ஸ், ஒருநாள் முழுக்க மாட்டிக்கொண்டு நடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதிலும் மொட்டை ராஜேந்திரனிடம் அடிவாங்குவது, உயரத்தில் இருந்து கீழே உருண்டு விழுவது என்று பல டார்ச்சர்களை அனுபவித்திருந்ததால் அப்படத்தை தொடர்ந்து சரியான வாய்ப்பில்லாமல் அப்படியே காணாமல் போய்விட்டார்.
பாலா இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய பரதேசி படம். அப்படத்தில் நடித்த நடிகை வேதிகாவின் திறமையை காட்ட வேண்டும் என்று அவரின் அழகையே மாற்றியிருக்கிறார். பால் டப்பா போல் காணப்படும் வேதிகாவை பரதேசி படத்தில் கருப்பாக காட்ட 4 மணி நேரம் மேக்கப் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிலும் அப்படத்தில் வேதிகா வாங்கிய அடிகளும் மிதிகளும் எதார்த்தமாக இருக்க உண்மையாகவே அதை நடத்தியிருக்கிறார் பாலா.
பாலா கொடுக்கும் டார்ச்சர்களை பலர் வெளியில் கூறமாட்டார்கள். ஆனால், நடிகை மமிதா பாஜு, பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலா தன்னை அடித்ததாக கூறி ஷாக் கொடுத்தார்.
சியான் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமை அறிமுகப்படுத்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிக்க வைக்க இயக்குனர் பாலாவிடம் கேட்டு அப்படத்தை ஆரம்பத்தில் இயக்கவைத்திருக்கிறார். ஆனால் பாலா செய்த டார்ச்சரால் அப்படம் வேறு ஒருவரின் கைக்கு சென்றது. ஆரம்பத்தில் இயக்கிய பாலாவிடம் அப்படத்தின் கதாநாயகி பனிடா ஷந்து ஷூட்டிங்கில் அவரால் பல டார்ச்சரை அனுபவித்திருக்கிறார்.