கார் பார்க்கிங்லயே கணவருடன் தாறு மாறு ரொமான்ஸ்.. வரம்பு மீறும் நயன்தாரா..!
மலையாள மங்கையான நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்து கொண்டு இருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொழில் முனைவோராக பல்வேறு தொழில்களை செய்து வரக்கூடிய இவர் பல தொழில்களில் முதலீடுகளையும் செய்து தொழில் அதிபராக வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்த இவர் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடியவர்களோடு இணைந்து நடித்து பல்வேறு பட வாய்ப்புகளை பெற்றார். ஆரம்ப காலத்தில் மற்ற நடிகைகளை போல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பிறகு வித்தியாசமான பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
பில்லா படத்தில் தல அஜித்தோடு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் கோலமாவு கோகிலா படத்தில் தனது நேர்த்தியான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதோடு அண்மையில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படமும் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து இருக்கக்கூடிய நயந்தாரா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா வல்லவன் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் சிம்புவோடு காதல் வயம் கொண்டார்.
மேலும் அந்தத் திரைப்பட ஷூட்டிங் சமயத்தில் இருவரும் டேட்டிங் சென்று வந்ததாக செய்திகள் கசிந்து வந்தது. இதனை அடுத்து இவர்கள் பிரேக் அப் செய்து கொண்டார்கள்.
சிம்புவை விட்டு பிரபுதேவாவின் மீது காதல் கொண்ட நயன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததை அடுத்து பிரபுதேவாவுடன் இருந்த உறவை துண்டித்துக் கொண்டார்.
இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனை 10 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து கடைசியில் திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாராகி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தன் கணவரோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.
அந்த வகையில் தற்போது கார் பார்க்கிங்கில் கணவரோடு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது என்று கதறி வருகிறார்கள்.
இன்னும் இளமை மாறாமல் அம்மா ஆன எண்ணமும் இல்லாமல் கூடுதலாக ரொமான்ஸில் கணவரோடு கலக்கியிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து கார் பார்க்கிங்கிலேயே கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ் செய்திருக்கும் நயன்தாராவை வரம்பு மீறி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மையில் வரம்பு மீறிய நயன்தாராவின் தாறுமாறு ரொமான்ஸை பற்றி நீங்களும் வர்ணித்து தள்ளி விடுவீர்கள். அந்த அளவு சிறப்பாக இந்த புகைப்படங்கள் உள்ளது என்றால் மிகை ஆகாது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா என்னை கண்டபடி கட்டிப்புடிடா என்ற பாடல் வரிகளை பாடிய வண்ணம் இந்த போட்டோக்களுக்கு அதிக அளவு லைக்குகளை கொடுத்து இணையத்தையே திணற அடித்து விட்டார்கள்.