சீனியர் நடிகருடன் காதல்.. நின்று போன திருமணம்.. விபரீத முடிவெடுத்த நடிகை!

சீனியர் நடிகருடன் காதல்.. நின்று போன திருமணம்.. விபரீத முடிவெடுத்த நடிகை!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் நம்பர் நடிகை தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். தன்னை விட 20 வயது மூத்த நடிகரை காதலித்த நம்பர் நடிகையை அந்த சீனியர் நடிகர உதாசீனப்படுத்தி உள்ளார். வசீகரமான முகம், அழகான உடல் வனப்பை கொண்ட அந்த நடிகை பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். சினிமாவின் மீது இருந்த ஆசையால் மாடல் அழகியான அந்த மூன்று எழுத்து நடிகை கதாநாயகி வாய்ப்புக்காக கிடைத்த கதாபாத்திரத்திரத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.

சிங்கம் 3 டைம்லயே ஹரி சினிமாட்டிக் யூனிவர்சை யோசிச்சிட்டேன்.. ஆனா.. இயக்குநர் ஹரி ஓபன்! ஹிட்டடித்த படம் : இவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் சுமாரான வெற்றி பெற்றதை அடுத்து, தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, சீனியர் நடிகர் ஒருவருடன் ஜோடிபோட்டு நடிக்கும் வாய்ப்பு நம்பர் நடிகைக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகை. தனது மொத்த திறமையையும் அந்த படத்தில் காட்டி மக்கள் மனதில் தனி இடத்தைப்பிடித்தார்.

சீனியர் நடிகருடன் அந்த படத்தில் ஜோடி போட்டு நடித்தபோது, அந்த நடிகர் மீது காதல் வயப்பட்ட அந்த நம்பர் நடிகை, அவருடன் பல இடங்களில் ஜோடியாக சுற்றினார். தான் காதலித்த நடிகர் தன்னை விட 20 வயது மூத்த நடிகராக இருந்தாலும், தனது காதலை கூறி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த சீனியர் நடிகரோ, காதலாவது கத்திரிக்கையாவது என்று நம்பர் நடிகையின் முகத்தில் அடித்தது போல நோ சொல்லிவிட்டார்.

இதனால், மனவேதனையில் இந்த அந்த நம்பர் நடிகை சீனியர் நடிகரை பழிக்கு பழிவாங்க ஒரு இளம் நடிகருடன் ஊர் ஊராக சுற்றி. சினிமாவில் தனது பெயரை கொடுத்துக்கொண்டார். மகளின் இந்த செயலால் கடுப்பான நம்பர் நடிகையின் பெற்றோர். எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலைவிரித்து மாப்பிள்ளை தேடினார்கள். இளம் நடிகருடன் பழக்கம் இருந்த போதும், பெற்றோர் பார்த்த வரனுக்கு ஓகே சொல்லிவிட்டார். துரத்தி துரத்தி பானுப்பிரியாவை காதலித்த ரம்யா கிருஷ்ணனின் கணவர்.. பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்! 

இதையடுத்து தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றும் திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் நம்பர் நடிகையின் கடந்த கால காதல் உறவுகள் தொழிலதிபருக்கு தெரியவர, இது எல்லாம் எங்க குடும்பத்திற்கு செட்டாகாது என்று அவருக்கு டாடா காட்டிவிட்டார். தற்போது அந்த நடிகைக்கு 40 வயதான போதும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், முன்பை விட இப்போதுதான் அந்த நடிகைக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. இதனால், கல்யாணமே வேண்டாம் என்ற முடிவுடன் நம்பர் நடிகை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES