முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..!

முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..!

1977-ல் பிறந்த நடிகை ஷகீலா ஆரம்ப காலத்தில் மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர்.


இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாள திரைப்படம் மாபெரும் வெற்றி அடைத்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

பதினைந்தாவது வயதிலேயே துணை நடிகையாக அறிமுகம் ஆன இவர் அதிகளவு பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 110-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

மலையாளத் திரை உலகில் இவரது திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவரும் நடுங்குவார்கள். அந்த அளவு இவரது படம் வெற்றி அடைவதோடு அதிகளவு வசூலியையும் குவித்து விடும்.

லேடிலால் என ரசிகர்களால் அன்போடு அழைக்கக்கூடிய இவர் சைக்லோன் என்ற பட்டத்தையும் ரசிகர்களின் மூலம் பெற்றிருக்கிறார். அது மாதிரியான படங்கள் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் இவரது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவரை அந்த நடிப்புக்கு என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கும் நடிகை ஷகீலாவின் மவுசு இன்றும் குறையவில்லை என்று சொல்லலாம். அந்த அளவு ரசிகர்களின் ஆதரவு இன்று வரை இவருக்கு அதிகமாக உள்ளது.

குறிப்பாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதை அடுத்து ஷகீலாவின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவரை அன்போடு அம்மா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் இவர் 2012 ஆம் ஆண்டு முதல் இனி பி கிரேட் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். அத்தோடு பல பிரபல நடிகைகளின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு வகையான கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

அந்த வகையில் இவரிடம் நீங்கள் வெர்ஜினா என்று கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே இல்லை என்று பதில் சொன்ன அவர் முதல் முதலில் உறவு கொண்ட நபர் யார் என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலை அளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் இவர் தான் முதல் முதலில் உறவு கொண்டது தன்னுடைய நெருங்கிய நண்பருடன் தான் என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

அந்த நண்பர் பெயர் ரிச்சர்ட் என தெரிவித்திருக்கிறார். இப்படி ஓப்பனாக கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இது வரை திருமணம் செய்து கொள்ளாத நடிகை ஷகிலா மீளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஷகீலா இப்போது சொன்ன எந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

LATEST News

Trending News