வாரிசு நடிகையின் காதல் தொந்தரவால் மிகப்பெரும் தலைவலியில் பிரபல இயக்குனர், இதெல்லாம் தேவையா..
கோலிவுட்டில் என்றுமே சர்ச்சைகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி ஒரு கிசுகிசு தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வந்த ஒரு படத்தின் இயக்குனருக்கும், வாரிசு நடிகைக்கும் மிகவும் நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம்.
இதை பொறுமையாக பார்த்த தயாரிப்பு நிறுவனம் ஒரு கட்டத்தில் இது எல்லை மீறி போகிறது, நம் படத்திற்கு ஆபத்து வந்துவிடும் என இயக்குனரை எச்சரித்ததாம்.
இயக்குனரும் தன் நிலை புரிந்து உடனே சுதாரித்து அடுத்தடுத்த படங்களின் கதையிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.
அப்படியிருந்தும் அந்த வாரிசு நடிகை அந்த இயக்குனரை விடுவதாக இல்லையாம், தொடர்ந்து துரத்தி தான் வருகின்றாராம்.
சரி வெறுமென வாரிசு நடிகை, இயக்குனர் என்றால் எங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் கேட்பதும் புரிகின்றது.
கிசுகிசு என்றால் அப்படி தானே சொல்ல வேண்டும், சரி உங்களுக்காக ஒரு க்ளூ தருகிறோம், முடிந்தால் கண்டுப்பிடியுங்கள்.
அந்த இயக்குனர் அடுத்து ஸ்டார் நடிகர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.