“அவங்களுக்கு வேலை ம** கெடையாது..” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா காட்டம்.. என்ன காரணம்..

“அவங்களுக்கு வேலை ம** கெடையாது..” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா காட்டம்.. என்ன காரணம்..

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கேப்ரில்லா செல்லஸ்.

இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக கான்செப்ட் வீடியோக்கள் நடன வீடியோக்கள் என தொடர்ச்சியாக வெளியிட்டு பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தனக்கு தானே நல்ல அறிமுகத்தை தேடிக்கொண்டார்.

டிக் டாக் youtube உள்ளிட தலங்களில் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இதன் காரணமாக இவருக்கு திரைப்படம் மற்றும் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது.

தற்பொழுது சுந்தரி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மனதிற்குப் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர் சுந்தரி.எந்த ஒரு விஷயத்தையும் மறைத்து ஒழித்து பேசும் பழக்கம் இவரிடம் கிடையாது. சினிமாவில் நடிப்பதற்காக தன்னுடைய ஊரை விட்டு ஓடி வந்தவர்.

சமீபத்தியா பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் சிறு வயது முதலே துடுக்கு தொடுக்கென இருக்கக்கூடிய ஒரு பெண். எளிதாக கெட்ட பெயர் எடுக்க கூடிய ஒரு கேரக்டர். சில பெண்கள் எல்லாம் யார் எப்படி போனால் என்ன என்று இருப்பார்கள். அது போல தான் நானும்.

யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். யாராக இருந்தாலும் அவர் கூட நம்பி உரையாடுவேன். இப்படிப்பட்ட ஒரு பெண். திடீரென சென்னை ஓடி வந்து விட்டேன் என்றால் என்னுடைய பெயர் எப்படி கெட்டுப் போயிருக்கும்.

ஆனால், அந்த வேதனை எல்லாம் பொறுத்துக் கொண்டு நான் என்னுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினேன். தற்பொழுது இந்த நிலையில் இருக்கிறேன்.

சுந்தரி சீரியல் எனக்கு நிறைவான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார்.

மேலும் உங்களுடைய சமூகவலை பக்கங்களில் உங்களை பற்றி மோசமான கருத்துக்களை தெரிவிக்க கூடியவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

என்னை பொறுத்தவரை நெகட்டிவ்வாக பேசக்கூடியவர்கள் எல்லாம் நான் கவனித்தில் கொள்வதே கிடையாது. ஏனென்றால் நான் பாசிட்டிவான பெண். பாசிட்டிவான விஷயங்களுக்கு முன்னால் நெகட்டிவ்வான விஷயங்களுக்கு வேலை ம*ரே கெடையாது என்று காட்டமாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES