மோகன் லால், மீனா நடிப்பில் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் திரிஷ்யம் 2. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இப்படம் திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை அடுத்த தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நீதிமன்ற காட்சிகளை வழக்கறிஞர் ரேணுகா கேரக்டரில் சிறப்பாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் சாந்தி பிரியா.
இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் வழக்கறிஞர் தானாம். கேரளாவின் எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்டு இவர் கேரளா லா அகாதமியில் சட்டம் படித்தவராம்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பின் சினிமா நடிகையாகிவிட்டாராம். மம்முட்டு நடித்த கானகந்தர்வன் படத்திலும் வழக்கறிஞராகவே நடித்துள்ளாராம்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறதாம். குழந்தை மற்றும் கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ...