“ஷூட்டிங் முடிஞ்ச பிறகு நடிகர்களுடன் இப்படி இருப்பேன்..” ஸ்ரீதிவ்யா திமிர் பேச்சு..
நடிகை ஸ்ரீதிவ்யா அதிகளவு தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் சேர்ந்த இவர் கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்தவர்.
ஆரம்ப காலத்தில் தெலுங்கு படத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பதோடு தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அசத்தியவர்.
மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றியை தராததை அடுத்து இவர் 2012-ல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் நடிக்க இந்த படம் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.
தமிழ் திரையுலகை பொருத்த வரை வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். முதல் படமே ஒரு மிகப்பெரிய ஸ்டாரோடு இணைந்து நடித்ததால் இவரது நடிப்பு தமிழக இளைஞர்களின் மனதில் பதியும் படி ஒரு நல்ல ரிச் கிடைத்தது.
இதனை அடுத்து பென்சில் எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷுக்கு ஜோடி போட்டு நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். மேலும் இவரது நடிப்பில் ஈட்டி, காக்கிச்சட்டை, வெள்ளைக்கார துரை போன்ற படங்கள் வெளி வந்து மக்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது.
மேலும் 2016 ஆம் ஆண்டு மருது என்ற படத்தில் பாக்கியலட்சுமி கேரக்டரை செய்து அசத்திய இவர் அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து போனது. சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடுவார்
மிகப்பெரிய நீண்ட இடைவெளியை தமிழ் திரையுலகில் எடுத்துக்கொண்ட இவர் ரெண்டு என்கிற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஷூட்டிங் முடிந்த பிறகு நடிகர்களுடன் இப்படித்தான் இருப்பேன் என்ற திமிரான பேச்சை ஸ்ரீதிவ்யா வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திரையுலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட் களை பற்றி சொல்லும் போது 30 வயசு ஆனாலும் படுக்கைக்கு அழைக்க கூடிய சக நடிகர்களுக்கு திமிரு அதிகம் உள்ளதாகவும், அவர்களை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இவரிடம் 10 வருடத்திற்கு முன்னாடி உச்ச நடிகையா கொடிகட்டி பறந்தீங்க.. இப்ப ஏன் ஒரு படம் கூட நடிக்கிறது இல்லை.. 30 வயசு ஆச்சு கல்யாணமாச்சும் பண்ணலாமல்ல.. என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் திமிராக பேசிய பேச்சைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். படத்துக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும் என்று யாராவது கேட்டாலே நான் செருப்பை எடுத்துடுவேன் அதனால கூட எனக்கு பட வாய்ப்பு வராமல் இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் சக நடிகர்களோடு ஷூட்டிங் டைம் விட்டு மத்த டைம்ல கொஞ்சம் திமிரா தான் நடந்துப்பேன். எதுக்கு வம்பு என்று சில சமயம் ஒதுங்கி போய்விடுவேன். நான் சினிமாவுல இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு. அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று அழுத்தம் திருத்தமாக பதில் அளித்து இருப்பதை பார்த்து அனைவரும் வியந்து விட்டார்கள்.
போக்கிரிக்கு போக்கிரி ராஜா என்று சொல்வது போல இவர் சற்று கான்பிடன்ஸ் லெவலில் அதிகமாக தான் இருக்கிறார் என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.