கிழிந்த சண்டையுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால்- ஏன் தெரியுமா?
உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்து இப்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரம் எடுத்தவர் விஷால்.
செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகயாக அறிமுகமான விஷால் சண்டக்கோழி, அவன் இவன், துப்பறிவாளன் என வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார்.
நடிகராக கலக்கிய போதே விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரித்தும் வந்தார். கடைசியாக விஷால் நடித்த லத்தி திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றது.
அடுத்து துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.
செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷால் கலந்துகொண்டார்.
கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஷாலுக்கு மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாட்டு வண்டியில் பயணம் செய்து பெண்களுடன் இணைந்து நடவும் நட அப்போது எதிர்ப்பாராத விதமாக அவரது உடை கிழிந்துள்ளது.
உடனே மாற்று உடையை கொடுத்துள்ளார்கள், ஆனால் அவர் விவசாயம் செய்யும் போது கிழிந்தது தானே அது பெருமையான விஷயம் தான் என அந்த உடையிலேயே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.