தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் விஜய் பற்றி எழுதிய நடிகை பிரியங்கா சோப்ரா- தளபதி ரசிகர்களே இது தெரியுமா?

தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் விஜய் பற்றி எழுதிய நடிகை பிரியங்கா சோப்ரா- தளபதி ரசிகர்களே இது தெரியுமா?

2000ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு டைட்டிலை ஜெயித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கினார்.

இப்போது ஹாலிவுட்டில் கால் பதித்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா UnFinished என்ற பெயரில் தனது வாழ்க்கையில் நடந்த விஷயம், பிடித்த-பிடிக்காத விஷயங்கள் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் தமிழன் பட நாயகனாக விஜய் குறித்தும் எழுதியுள்ளார். அதில் அவர், விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் சகஜமாக பழகுவதும், ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் எல்லாம் பார்க்கும் போது அவர் மீது எனக்கு நல்ல எண்ணம் தோன்றியது.

எனது ஹாலிவுட் பட படப்பிடிப்பின் இடைவேளையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் தான் நியாபகம் வந்தது என எழுதியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES