GOAT இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா.. வெங்கட் பிரபு கோபமாக கொடுத்த பதில்
விஜய் அடுத்து நடிக்கும் படத்தினை வெங்கட் பிரபு இயக்க வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அதிகம் வைரல் ஆனது.
The Greatest of All Time (GOAT) என படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று பர்ஸ்ட் லுக் வைரலான நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் இருவரும் பைக்கில் துப்பாக்கி உடன் செல்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
ஹாலிவுட் பட ரீமேக்கா?
இந்நிலையில் GOAT படம் Gemini man என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என ஒரு வதந்தி பரவி வந்தது. அது பற்றி வெங்கட் பிரபு பதிலடி கொடுத்து ட்விட்டரில் பதில் கொடுத்து இருக்கிறார்.
