“என்னோட ஜட்டியை கூட விடல..” தனுஷ் பட நடிகை மேக்னா நாயுடு கதறல்..! என்ன காரணம்..

“என்னோட ஜட்டியை கூட விடல..” தனுஷ் பட நடிகை மேக்னா நாயுடு கதறல்..! என்ன காரணம்..

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி இருக்கும் நடிகை மேக்னா நாயுடு நடிகர் தனுஷின் குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடலில் நடனமாடினார்.

இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் என்னுடைய ஜட்டியை கூட விட்டு வைக்கவில்லை என்று கதறியுள்ளார். எதனால் நடிகை மேக்னா நாயுடு இப்படி ஒரு பதிவை எழுதி இருக்கிறார் போன்ற விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

அவர் கூறியதாவது, எனக்கு கோவாவில் ஒரு வீடு இருக்கிறது. என்னுடைய வீட்டை நாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்து கொண்டிருந்தார். அவரிடம், கணவன் மனைவி இருவர் வந்து எங்களுடைய வீட்டை வாடகைக்கு கேட்டிருகிறார்கள் அவரும் கொடுத்திருக்கிறார்.

நாங்கள் இருவரும் நியூசிலாந்தில் வேலை செய்வதாகவும்.. மும்பையை சேர்ந்தவர்கள் என்றும்.. கூறியிருக்கிறார்கள். அவர்களுடைய ஆதார் அட்டை.. ஓட்டுனர் உரிமம்.. ஆகியவற்றின் நகல்களை வாங்கிக்கொண்டு அவருக்கு வீடு வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், திடீரென இரவோடு இரவாக காணாமல் போய்விட்டார்கள். என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் நான் வைத்திருந்தேன்.

என்னுடைய விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், ஹேண்ட் பேக்குகள், ஸ்பீக்கர்கள், காலுறைகள், இவ்வளவு ஏன் ஜட்டியை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் அவர்கள் திருடி சென்று விட்டார்கள்.

நாங்கள் இந்த அனைத்து பொருட்களையும் படுக்கையின் அடியில் இருக்கக்கூடிய டிராவில் வைத்து பூட்டி இருந்தோம். அவை அனைத்தையும் திருடிச்சென்று இருக்கிறார்கள்.

நான் வாங்கி வைத்த சிலைகள் மற்றும் போட்டோ பிரேம்கள் உடைக்கப்பட்டு குப்பையாகப்பட்டிருக்கிறது. இதனை வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் போட்டு இருக்கிறார்கள்.

மட்டுமில்லாமல் என்னுடைய கதவின் பூட்டையும் அவர்கள் மாற்றி விட்டார்கள். இத்துடன் இவர்களுடைய வேலை முடியவில்லை. என்னுடைய வீட்டின் பராமரிப்பாளரிடம் அவசர தேவை எனக் கூறி 85 ஆயிரம் ரூபாய் பணத்தை சில தினங்களில் திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறி வாங்கி இருக்கின்றனர்.

ஆனால் அந்த பணத்தையும் கொடுக்காமல் தப்பி இருக்கின்றனர். இவர்கள் கோவாவை சுற்றி தான் இருப்பார்கள். இவர்களை யாராவது கண்டால் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்த நபர்களை பிடிக்க வேண்டும்.. என்னுடைய உடமைகளை மீட்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES