ராஷ்மிகா அனிமல் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...

ராஷ்மிகா அனிமல் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...

அனிமல் திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் தொடர்பான விபரம் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டடப்படும் இவர் தமிழில் இறுதியாக விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் நல்ல வசூலை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது.

ராஷ்மிகா அனிமல் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Rashmika Mandanna Shocking Salary For Animalபுஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா நடித்து வந்த நிலையில் இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன. தற்போது பிரபல நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

இதில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் 1ஆம் திகதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது.  பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

ராஷ்மிகா அனிமல் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Rashmika Mandanna Shocking Salary For Animalஇந்நிலையில் தற்போது 'அனிமல்' திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக 6 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க 3 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது இந்த படத்தில் நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES