சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்.. பாராட்டும் நெட்டிசன்கள்.

சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்.. பாராட்டும் நெட்டிசன்கள்.

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதனைத்தவிர, தனது 25-வது படமான "கிங்ஸ்டன்" என்ற படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.

சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்.. பாராட்டும் நெட்டிசன்கள் | G V Prakash Kumar Helped For Child Treatmentசமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் ஒருவர், "என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்தில் கட்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆப்பரேஷன் செய்ய சொல்கிறார்கள், அதற்கு 3.5 - 4 லட்சம் வரை ஆகும் என்று சொல்கிறார்கள்".

"எங்கள் குடும்பத்தில் இருந்து 2 லட்சம் வரை ரெடி பண்ணிட்டோம். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் உதவி கேட்ட நபருக்கு 75,000 ரூபாயை ஜி.வி.பிரகாஷ் அனுப்பியுள்ளார். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் இந்த உதவிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

LATEST News

Trending News