விஷால் பட பாடலுக்கு செல்லப்பிராணியுடன் ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ!
விஷால் நடித்த படம் ஒன்றில் இடம்பெற்ற பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப் பிராணிகளுடன் நடன அசைவு கொடுக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவான ’எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ’டம் டம்’ என்பது தெரிந்தது. இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு தனது செல்லப்பிராணியை உடன் உட்கார்ந்து கொண்டே நடன அசைவு செய்யும் வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’எனிமி’ படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து, கீர்த்தி சுரேஷுக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். மேலும் மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ’சர்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படம் வெற்றி பெறவும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Woowwwwwwwwieee !!
— thaman S (@MusicThaman) November 20, 2021
This is super super cute 🥁❤️ @KeerthyOfficial #TumTum #Tumtumsong from #Enemy 🎧💃💃💃🥁🥁🥁🥁 thanks so much #keerthss our #Mahanati then But Now it’s #kalavathi from #SarkaruVaariPaata 💥💥♥️♥️♥️ pic.twitter.com/TxBkYYur2a