தனது அம்மாவிற்காக புதிய வீட்டை இடித்துள்ள சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்- ஏன் தெரியுமா?

தனது அம்மாவிற்காக புதிய வீட்டை இடித்துள்ள சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்- ஏன் தெரியுமா?

செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக களமிறங்கி பின் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியா பிரின்ஸ்.

கடைசியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கண்ணான கண்ணே என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார்.

தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் மாப்பிள்ளை, என் பெயர் மீனாட்சி, EMI-தவணை முறை வாழ்க்கை, பொன்மகள் வந்தாள், கண்மணி மற்றும் கடைசியாக கண்ணான கண்ணே என தொடர்ந்து சீரியல்கள் நடித்தார்.

வெள்ளித்திரையில் பசங்க 2, 2.0, நடுவன் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிரியா பிரின்ஸ் சமீபத்தில் புதிதாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தார், தனது வீட்டில் பார் செட்டப் படங்களில் வருவது போலவே இருந்தது. இந்த தகவலை தனது யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

சமையலறை திறந்த வெளியாக இல்லை என்பதால் இடித்து மீண்டும் திறந்தவெளி சமையலறையாக கட்டியுள்ளார். அம்மாவின் சந்தோசம் மட்டும் பார்க்கிறோம் அடுப்பறையில் படும் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காகவே சமையலறையை மாற்றி காட்டினேன் என்றுள்ளார்.

LATEST News

Trending News