ரிலீஸுக்கு முன்பே வெளிநாட்டில் வசூலை அள்ளும் சலார்.. பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்.

ரிலீஸுக்கு முன்பே வெளிநாட்டில் வசூலை அள்ளும் சலார்.. பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்.

கடந்த சில படங்களாக தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பின் இந்தியளவில் முன்னணி நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாகவும் உயர்ந்த பிரபாஸ் அதற்கு அடுத்தடுத்த படங்களில் வீழ்ச்சியை சந்தித்தது.

சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புருஷ் என தொடர் தோல்வி காரணமாக அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் உள்ளனர். அதை அனைத்துமே சரி செய்யும் விதமாக சலார் படம் வெளிவரவுள்ளது.

ரிலீஸுக்கு முன்பே வெளிநாட்டில் வசூலை அள்ளும் சலார்.. பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட் | Prabhas Salaar Movie Pre Booking Collectionகே.ஜி.எப் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 22ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கும் மேல் இடைவேளை இருக்கும் நிலையில், USA-வில் ப்ரீ புக்கிங் ஆரம்பித்துவிட்டது. இதில் இதுவரை ரூ. 1 கோடிக்கும் மேல் USA பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே சலார் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸுக்கு முன்பே வெளிநாட்டில் வசூலை அள்ளும் சலார்.. பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட் | Prabhas Salaar Movie Pre Booking Collection

ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வசூலை அள்ளிவரும் சலார் படம் கண்டிப்பாக உலகளவில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES