இரண்டு முக்கிய இடங்களில் அடிவாங்கிய லியோ.. வசூலில் ஏற்பட்ட பாதிப்பு
விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் மீது சில கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கூட பல இடங்களில் வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், முக்கியமான சில இடங்களில் லியோ படத்தின் வசூல் அடிவாங்கியுள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற முக்கிய இடங்களில் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூல் செய்த லியோ படம் அடுத்தடுத்த நாட்களில் குறைவான வசூலை செய்துள்ளது.
இதுவரை படம் வெளிவந்து ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ. 30 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதால் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் லியோ படத்திற்கு மாபெரும் வசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.